TAMILMOVIEROCKERS Facebook Official
Ticket Torrents
Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > Tamil Cinema Zone > Cine News
Reload this Page சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 55,240, Level: 72
Points: 55,240, Level: 72 Points: 55,240, Level: 72 Points: 55,240, Level: 72
Level up: 80%, 310 Points needed
Level up: 80% Level up: 80% Level up: 80%
Activity: 78.6%
Activity: 78.6% Activity: 78.6% Activity: 78.6%

I proudly released 155 torrents with 935 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,315
Rep Power: 62
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 133.83 gb DL: 34.34 gb Ratio: 3.90
My Mood: Amused
Hot Topic சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி - 13-06-2016

சொப்பன சுந்தரி
அஞ்சலிதேவி


தமிழ்த் திரையில் கல்யாணமாகாத கன்னிப் பெண்களே கதாநாயகிகளாக நடித்து வந்தனர். ஆனால் அஞ்சலிதேவியும் சௌகார் ஜானகியும் திருமணமான பின்பு நடிக்க வந்தார்கள். சௌகார் ஜானகி பெரும்பாலும் குணச்சித்திர, குடும்பத் தலைவி வேடங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் அஞ்சலிதேவியோ (தனது பிற்கால படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் குடும்பத் தலைவி வேடங்களிலும் நடித்தாலும்), தொடக்ககால படங்களில் ரம்பா, ஊர்வசி, மோகினி, கந்தர்வக் கன்னி போன்ற கவர்ச்சி வேடங்களில் நடித்து, இரசிகர்களின் கனவுக் கன்னியாக (சொப்பன சுந்தரியாக) விளங்கினார்.

1. அஞ்சலிதேவி - வாழ்க்கை குறிப்பு


ஆந்திர மாநிலம் (பழைய சென்னை ராஜஸ்தானி), கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள விசாகப்பட்டிணம் அருகிலுள்ள பெத்தாபுரத்தில் வசித்த, நோகைய்யா சூரம்மா என்ற சத்தியவதி தம்பதிக்கு, 14 05 1927 இல் பிறந்தார் அங்கம்மா என்ற அஞ்சனி என்ற அஞ்சலிதேவி. நோகைய்யா ஒரு விவசாயியாக மட்டுமின்றி, ஹார்மோனியக் கலைஞராகவும் நாடகக் கலைஞராகவும் விளங்கினார். அஞ்சலிதேவி பள்ளியில் படிக்கும் போதே நாடகத்தில் ஆர்வம் கொண்டு நாடகத்தில் நடித்து வந்தார். பெற்றோரின் விருப்பத்துடன் நாட்டியத்தையும் கற்றார். 1943 இல் கவர்னராக இருந்த சர்.ஆர்தர் ஹோப் முன்னிலையில் நாட்டியமாடி தங்கப் பதக்கம் பெற்றார் அஞ்சலிதேவி. அஞ்சலிதேவியின் இஷ்ட தெய்வம் சத்ய சாய்பாபா.

ஆந்திர நாடக மண்டலி என்ற அமைப்பின் ஸ்தாபகராக இருந்தார் ஆதிநாராயணராவ். காக்கிநாடா ஹை ஸ்கூலில் படிக்கும்போது ஆதிநாராயணராவின் சந்திப்பு அஞ்சலிதேவிக்கு கிடைத்து, 1942 இல் அவரையே அஞ்சலிதேவி மணந்து கொண்டார். அஞ்சலிதேவியின் 18 வது வயதில் 1945 இல் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சலிதேவி ஆதிநாராயணராவ் தம்பதியர் 1946 இல் சென்னைக்கு வந்தனர். இந்த தம்பதிக்கு சின்னராவ், நிரஞ்சன்குமார் என்ற இரு மகன்கள் உண்டு. சின்னராவ் எஞ்ஜினியராகவும், சிவரஞ்சன்குமார் டாக்டராகவும் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். சிரிப்பு நடிகர் கே.சாரங்கபாணியின் மூத்த மகளைத்தான் சின்னராவ் மணந்துள்ளார். அஞ்சலிதேவிக்கு பேரப் பிள்ளைகள் உள்ளனர். ஆதிநாராயணராவ் சிறந்த இசையமைப்பாளராகவும் படத்தயாரிப்பாளராகவும் விளங்கினார். அஞ்சலிதேவி நடித்த சில படங்களை தயாரித்து அப்படங்களுக்கு இசையும் அமைத்து, அஞ்சலியின் திரை வாழ்விற்கு ஏணியாக விளங்கினார் அஞ்சலியின் கணவர். ஆதிநாராயணராவ் தான் தயாரித்த படங்களுக்கு மட்டும் இசையமைத்தாரே தவிர, பிற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அஞ்சலிதேவியின் நாட்டியமும் ஆதிநாராயணராவின் வாத்தியமும் இரசிகர்களை சொக்க வைத்தன. 1991 இல் ஆதிநாராயணராவ் காலமானார்.

2, ஸெனடாப் ரோடு, சென்னை 18 என்ற முகவரியில் அஞ்சலி வசித்துள்ளார். ராஜா அண்ணாமலைபுரத்தில் இவரது இல்லம் உள்ளது. அஞ்சலிதேவி ஆதிநாராயணராவ் தம்பதியர் தங்களின் சுந்தரம் மாளிகையை சத்ய சாயிபாபா நற்பணிகளுக்கு வழங்கிவிட்டார்கள். சத்ய சாயிபாபா தொலைக் காட்சி தொடர் ஒன்றையும் இவர்கள் தயாரித்தார்கள்.

மங்கையர்க்கரசி படப்பிடிப்பின்போது, காட்சியமைப்பில் பணிபுரிந்த உதவியாளர்களின் கவனக் குறைவினால் ஏற்பட்ட தீவிபத்தில் அஞ்சலிதேவியின் முகம் கருகிவிட்டது. இவரின் இஷ்ட தெய்வம் சத்ய சாய்பாபாவின் அருளினால் இரு மாதங்களில் இவருடைய முகம் பழைய நிலைக்கே அழகான முகமாக குணமானது. அப்பொழுது அஞ்சலி பற்றி உவமைக் கவிஞர் சுரதா எழுதிய கவிதை ஒன்று,

Image

டவுன் பஸ் படத்தில் கண்டக்டர் வேடத்தில் அஞ்சலிதேவி




மார்ச் / பதின்மூன்றில் / மதிக்கும் / செங்கதிர்
உதித்து / வெய்யில் / உதவும் / காலையில்
நரசு / படப்பிடிப்பு / நிலையந் / தன்னில்
எழுந்து / அடங்குந் / தீவிபத்து / ஏற்பட்டது

ஆந்திர / அழகி / அஞ்சலி / கொஞ்சம் ஏ
மாந்திருந்தால் / அம்மைனா / நடிகையைச்
சேர்ந்தாரைக் / கொல்லும் / அந்தச் / செந்தீ
வற்றிச் / செத்த / வாழைச் / சருகினைத்
தின்னுதல் / போன்று / தின்றே / இருக்குமாம்

உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு வார காலம் சிகிச்சை பெற்று வந்தார் அஞ்சலிதேவி. சிகிச்சை பலனின்றி தனது 86 வது அகவையில் 13 01 2014 இல் இவர் காலமானார். தெலுங்கு எழுத்தாளர் ராவிகொண்டல்ராவ் என்பவர் அஞ்சலிதேவியின் வாழ்க்கை வரலாற்றை எழுத தொடங்கினார். புத்தகம் வந்ததா என்று தெரியவில்லை.

1964 இல் தமிழக அரசு இவருக்கு கலமாமணி விருது வழங்கியது. ஆந்திராவில் நந்தி அவார்டு பெற்றுள்ளார் இவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப் பதவியை ஓராண்டு காலம் இவர் வகித்துள்ளார். சென்னை ஃபிலிம் சேம்பரிலும் ஒரு வருடம் வைஸ் பிரசிடெண்டாக பதவி வகித்துள்ளார் இவர். 1957 முதல் திருப்பதி யுனிவர்சிட்டியின் ஆயுள் செனட் உறுப்பினராக இவர் இருந்துள்ளார். ரகுபதி வெங்கையா அவார்டு பெற்றுள்ளார் இவர்.

2. படவுலகில் அஞ்சலி


சி.புல்லையா இயக்கிய கொல்லபாமா என்ற தெலுங்கு படத்தில் மோகினி வேடத்தில் நடித்து புகழ்பெற்றார் அஞ்சலி. இதுவே இவரது முதல் படம். அஞ்சனகுமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்று மாற்றியவர் சி.புல்லையாதான்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிப் படங்களில் இவர் நடித்துள்ளார். அஞ்சலிதேவி நடித்த உஸ்தாத், தேவதா போன்ற இந்திப் படங்கள் இந்திய அளவில் இவருக்கு புகழளித்தன. அஞ்சலிதேவி தயாரித்த பச்சைமலைக் குறத்தி என்ற படம் வெளிவரவில்லை. அஞ்சலி ஆதிநராயணராவ் தம்பதியர், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் என்ற படத்தை பூலோன் கிசேஜ் என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார்கள். இந்த இந்திப் படம் பெரும் நட்டத்தையே தந்தது. ஏதோ பாபா அருளால் பொருளாதார சிக்கலிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அஞ்சலிதேவி நடித்த காலத்தில் தமிழ் சினிமா உலகில்; பத்மினி, பி.பானுமதி, சாவித்திரி, வைஜெயந்திமாலா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி போன்ற சிறந்த நடிகைகள் நடித்து வந்தனர்.

அஞ்சலிதேவி சொன்னது, நாங்களெல்லம் (நடிகைகள்) அப்பொழுது நிறைந்த உடையில் குறைந்த சம்பளத்தில் நடித்தோம். இப்பொழுதெல்லாம் (நடிகைகள்) குறைந்த உடையில் நிறைந்த சம்பளத்தில் நடிக்கிறார்கள்.

1951 இல் வந்த தமிழ் சினிமா சஞ்சிகையில் அஞ்சலிதேவி பற்றிய வர்ணனை, அஞ்சலி வந்தாள் ! ஆடிக் கொண்டு வந்தாள் ! விழிகளை உருட்டிக் கொண்டு வந்தாள் ! பட உலகம் பிரமித்தது ! மயங்கிற்று. பட உலகில் இவர் ஒரு மாயக்காரி, மயக்குகாரி, சிங்காரி, சொகுசுக்காரி, சொப்பன சுந்தரி, பட உலகில் நிரந்தர ஸ்தானம் பெற்றிருக்கிறார் அஞ்சலிதேவி.

தமிழ் சினிமா வரலாற்றில், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் A சான்று வழங்கப்பட்ட முதல் படம் மர்மயோகி. இப்படத்தில் அரூபமாக சில திகில் காட்சிகள் இருந்ததால் இச்சான்று வழங்கப்பட்டது.

அஞ்சலி நடித்த சில படங்களின் தலைப்புகள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக அமைந்துள்ளன. மாயாவதி, கிருஹலக்ஷ்மி, கிராமப் பெண், டாக்டர் சாவித்திரி, பூலோக ரம்பை, செஞ்சுலக்ஷ்மி, சக்கரவர்த்தி திருமகள், கன்னியின் காதலி, ஸ்திரீ ஸாகஸம், நாட்டிய தாரா, அடுத்த வீட்டுப் பெண், சொப்பன சுந்தரி, அனார்கலி ஆகிய படங்களின் தலைப்புகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளன.

அஞ்சலிதேவி தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை மயக்கியதைப் போலவே, படங்களிலும் நாயகர்களை மயக்கி மாலையாக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைப் போல் கதைகள் உள்ளன. மங்கையர்க்கரசி, மாயமாலை ஆகிய இரு படங்களிலும் நாயகனை மாலையாக மாற்றியுள்ளார்.

நடிகை பத்மினி அஞ்சலிதேவியின் நெருங்கிய தோழியாக உள்ளார். தன் மகன்களைக் சந்திக்க அஞ்சலிதேவி அமெரிக்க செல்லும்போது, அங்கு வசிக்கும் பத்மினியை சந்திக்க தவறுவதில்லை.

(தொடரும்)

அன்புடன்,
கவிஞர் பொன். செல்லமுத்து






செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ





5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 956 11-12-2016 07:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 508 11-12-2016 07:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 539 11-12-2016 07:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 1764 13-06-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1550 21-05-2016 08:19 PM

(#2)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 55,240, Level: 72
Points: 55,240, Level: 72 Points: 55,240, Level: 72 Points: 55,240, Level: 72
Level up: 80%, 310 Points needed
Level up: 80% Level up: 80% Level up: 80%
Activity: 78.6%
Activity: 78.6% Activity: 78.6% Activity: 78.6%

I proudly released 155 torrents with 935 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,315
Rep Power: 62
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 133.83 gb DL: 34.34 gb Ratio: 3.90
My Mood: Amused
Hot Topic 18-06-2016

3.அஞ்சலிதேவியும் கலைஞர்களும்


(1). தயாரிப்பாளார்களும் படங்களும்

ஜீபிடர் ஃபிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவி.எம். போன்ற பிரபல நிறுவனங்கள் தயாரித்த படங்களிலும் மற்றும் சில தயாரிப்புகளிலும் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.

ஜூபிடர் ஃபிலிம்ஸ் கன்னியின் காதலி, கன்னியின் சபதம், மர்மயோகி, இன்ஸ்பெக்டர்
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆதித்தன் கனவு, சர்வாதிகாரி
ஏவி.எம். பக்த பிரகலாதா, பெண்
தேவர்ஃபிலிம்ஸ் நீலமலைத் திருடன், அன்னை ஓர் ஆலயம்
நாராயணன் கம்பெனி இல்லறமே நல்லறம், கணவனே கண்கண்ட தெய்வம்
கணபதி பிக்சர்ஸ் மாயாவதி
எஃப்.நாகூர் மங்கயர்க்கரசி
டி.ஆர்.ராமச்சந்திரன் பொன் வயல்
டி.கே.எஸ்.சகோதரர்கள் ரத்த பாசம்
டி.எஸ்.பாலையா + எம்.எல்.பதி அலாவுதீனும் அற்புத விளக்கும்
எம்.ஏ.வேணு டவுன் பஸ்
பி.ஆர்.பந்துலு முதல் தேதி
பி.எஸ்.வீரப்பா வீரக் கனல்




(2). இயக்குநர்களும் படங்களும்

டி.ஆர்.சுந்தரம், டி.ஆர்.ரகுநாத், கே.ராம்நாத், வேதாந்தம் ராகவைய்யா போன்ற பிரபல இயக்குநர்களின் இயக்கங்களில் மட்டுமின்றி இன்னும் சில இயக்குநர்களின் இயக்கத்திலும் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.

வேதாந்தம் ராகவைய்யா (ஜெமினி கணேசனுக்கு சகலை, நடிகை சூரிய பிரபாவின் கணவர்) மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், அனார்கலி, அடுத்த வீட்டுப் பெண், ராஜ நந்தினி

டி.ஆர்.சுந்தரம் ஆதித்தன் கனவு, மாயாவதி, மாய ரம்பை, சர்வாதிகாரி
டி.ஆர்.ரகுநாத் கன்னியின் சபதம், கணவனே கண்கண்ட தெய்வம், அலாவுதீனும் அற்புத விளக்கும்
கே.ராம்நாத் கன்னியின் காதலி, மர்மயோகி
கே.சோமு டவுன் பஸ்
கே.வேம்பு தோழன்
கே.நாகபூஷணம் (பி.கண்ணாம்பாவின் கணவர்) நாகபஞ்சமி (தயாரிப்பு, இயக்கம்)
ஏ.காசிலிங்கம் சொர்க்கவாசல்
எல்.வி.பிரசாத் பூங்கோதை
டி.பிரகாஷ்ராவ் மாதர்குல மாணிக்கம்
டி.யோகானந்த் பூலோக ரம்பை, எங்கள் செல்வி, ஜெயசிம்ஹன், கல்யாணப் பெண்
ஜித்தன் பானர்ஜி மங்கையர்க்கரசி
ஹெச்.எம்.ரெட்டி நிரபராதி (தயாரிப்பு, இயக்கம்)
பி.ஸ்ரீதர்ராவ் நான் சொல்லும் ரகசியம்
ஸ்ரீதர் (கல்யாண பரிசு ஸ்ரீதர் அல்ல) மாயக்காரி
ஆர்.எஸ்.மணி இன்ஸ்பெக்டர் (சினோரியோ, இயக்கம்), ரத்த பாசம் (இயக்கம்)
சிஹெச்.நாராயணமூர்த்தி பக்த பிரகலாதா
சி.புல்லையா + சி.எஸ்.ராவ் லவ குசா (திரைக்கதை, இயக்கம்)
பி.புல்லையா இல்லறமே நல்லறம், கலைவாணன்
எம்.வி.ராமன் பெண்
ஏ.டி.கிருஷ்ணசாமி (திரைக்கதை, வசனம், இயக்கம்) பொன் வயல் (திரைக்கதை, இயக்கம்)
ஆர்.எம்.கிருஷ்ணசாமி டாக்டர் சாவித்திரி
ஜி.கே.ராமு வீரக் கனல் (ஒளிப்பதிவு, இயக்கம்)
ஜி.ஆர்.நாதன் நாக நந்தினி (ஒளிப்பதிவு, இயக்கம்)
ப.நீலகண்டன் முதல் தேதி, ஆடவந்த தெய்வம், சக்கரவர்த்தி திருமகள்
சாணக்கியா காலம் மாறிப் போச்சு
எம்.ஏ.திருமுகம் நீலமலைத் திருடன்
எம்.நடேசன் மன்னாதி மன்னன் (தயாரிப்பு, இயக்கம்)

(3). அஞ்சலிதேவியும் நாயகர்களும்

அஞ்சலிதேவி நாயகியாகவும் பிரபல நடிகர்கள் நாயகனாகவும் நடித்திருப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் அஞ்சலிதேவி நாயகியாகவும், அஞ்சலிக்கு ஜோடியாக மாதுரிதேவி நாயகனாகவும் கன்னியின் காதலி படத்தில் நடித்திருப்பதும் ஒரு அரிய திரை வரலாற்று நிகழ்வாக உள்ளது. அதாவது கே.பி.சுந்தராம்பாள் நந்தனாராகவும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி நாரதராகவும் ஆண் வேடங்களில் படங்களில் நடித்திருப்பார்கள். அங்ஙனமே கன்னியின் காதலி படத்தில் மாதுரிதேவியும் ஆண் வேடத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நம்ம அஞ்சலிதேவி நாயகி, மாதுரிதேவி நாயகன்.

தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் நடித்த; எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகிய 4 நாயகர்களுடனும் நடித்துள்ளார் நம்ம அஞ்சலிதேவி. மேலும் இந்நால்வருக்கும் மூத்த நடிகர்களான; பி.யூ.சின்னப்பா, ரஞ்சன், எம்.கே.ராதா, எம்.ஆர்.ராதா, கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருடனும் நடித்துள்ளார். தெலுங்குப் படவுலக பிரபல நாயகர்களான; என்.டி.ஆர்., ஏ.நாகேஸ்வரராவ் - ஆகியோருடனும் நடித்துள்ளார்.

ஏ.நாகேஸ்வரராவ் உடன் 13 படங்களிலும், ஜெமினியுடன் 9 படங்களிலும், என்.டி.ஆருடன் 8 படங்களிலும் நடித்த வகையில், இம்மூவருடனும் மட்டுமே அஞ்சலிதேவி அதிகப் படங்களில் நடித்துள்ளார்.

மாதுரிதேவி (நாயகனாக ஆண் வேடத்தில்) கன்னியின் காதலி
பி.யூ.சின்னப்பா மங்கையர்க்கரசி
ரஞ்சன் நீலமலைத் திருடன்
எம்.கே.ராதா கிருஹலக்ஷ்மி
எம்.ஆர்.ராதா பங்காளிகள்
கே.ஆர்.ராமசாமி கன்னியின் சபதம்
டி.ஆர்.மகாலிங்கம் ஆதித்தன் கனவு, மாயாவதி, ஆட வந்த தெய்வம்
செருகளத்தூர் சாமா மர்மயோகி

எம்.ஜி.ஆர். சர்வாதிகாரி, சக்கரவர்த்தி திருமகள், மன்னாதி மன்னன்
சிவாஜி கணேசன் முதல் தேதி, நான் சொல்லும் ரகசியம்
எஸ்.எஸ்.ஆர். சொர்க்க வாசல்

ஜெமினி கணேசன் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மாதர்குல மாணிக்கம், கணவனே கண்கண்ட தெய்வம், இல்லறமே நல்லறம், காலம் மாறிப் போச்சு, பூலோக ரம்பை, வீரக் கனல், பெண்,

ஆர்.எஸ்.மனோகர் தோழன்
டி.ஆர்.ராமச்சந்திரன் பொன் வயல், அடுத்த வீட்டுப் பெண்
பி.ஆர்.பந்துலு டாக்டர் சாவித்திரி
டி.கே.ஷண்முகம் ரத்த பாசம்
என்.என்.கண்ணப்பா டவுன் பஸ்
கே.பாலாஜி நாக நந்தினி

ஏ.நாகேஸ்வரராவ் கல்யாணப் பெண், கிராமப் பெண், மாயக்காரி, மாய மாலை, மாயக் குதிரை, பூங்கோதை, செஞ்சுலக்ஷ்மி, ஸ்திரீ ஸாகஸம், சொப்பன சுந்தரி, அலாவுதீனும் அற்புத விளக்கும், அனார்கலி, கலைவாணன், எங்கள் செல்வி, (1951 இல் மாயக்காரி, மாய மாலை, ஸ்திரீ ஸாகஸம் ஆகிய 3 படங்களில் நாகேஸ்வரராவுடன் அஞ்சலி நடித்தது குறிப்பிடத்தக்கது).

என்.டி.ராமாராவ் மாய ரம்பா, லவ குசா, நாட்டிய தாரா, சதி அனுசூயா, பட்டி விக்கிரமா, பால நாகம்மா, ஜெய சிம்ஹன், ராஜ நந்தினி,

எஸ்.வி.ரங்காராவ் பக்த பிரகலாதா
முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி நிரபராதி
ஸ்ரீராமமூர்த்தி ஏழை உழவன்

(4). அஞ்சலிதேவியும் வில்லன்களும்

அஞ்சலிதேவியுடன் நாயகனாக நடித்தவர்களைப் பார்த்தோம். அடுத்து இவருக்கு வில்லனாக நடித்தவர்களைப் பற்றியும் பார்ப்போம். பி.எஸ்.வீரப்பா 6 படங்களிலும், எம்.என்.நம்பியார் 4 படங்களிலும், எஸ்.வி.ரங்காராவ் 4 படங்களிலும், எம்.ஆர்.ராதா 3 படங்களிலும் அஞ்சலிதேவி (நடித்த பாத்திரங்களு) க்கு வில்லனாக நடித்துள்ளார்கள்.

பி.எஸ்.வீரப்பா பூலோக ரம்பை, வீரக் கனல், நாக நந்தினி, சக்கரவர்த்தி திருமகள், நீலமலைத் திருடன், மன்னாதி மன்னன்

எம்.என்.நம்பியார் சர்வாதிகாரி, கன்னியின் சபதம், கணவனே கண்கண்ட தெய்வம், இல்லறமே நல்லறம்

எஸ்.வி.ரங்காராவ் அலாவுதீனும் அற்புத விளக்கும், பட்டி விக்கிரமா, பால நாகம்மா, ஜெயசிம்ஹன்

எம்.ஆர்.ராதா மங்கையர் உள்ளம் மங்காத செல்வம், ஆடவந்த தெய்வம், பங்காளிகள் (நாயகன் + வில்லன்)

ஆர்.எஸ்.மனோகர் பொன் வயல்
கே.ஏ.தங்கவேலு பொன் வயல்
எம்.ஜி.சக்கரபாணி ஆதித்தன் கனவு
கே.ஆர்.ராம்சிங் கன்னியின் காதலி
டி.கே.ராமச்சந்திரன் டவுன் பஸ்
எஸ்.வி.ரங்காராவ் பக்த பிரகலாதா (ஹிரண்யனாக - நாயகன் + வில்லன்)
டி.எஸ்.பாலையா ரத்த பாசம்
சாயிராம் - கிருஹலக்ஷ்மி
எம்.வி.மணி மாய மாலை
முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி மாயக்காரி, சொப்பன சுந்தரி
ரேலங்கி ஏழை உழவன்

(5). அஞ்சலிதேவியுடன் நடித்த நடிகர்கள்

அஞ்சலிதேவியுடன் நடித்த சில நடிகர்களை பற்றி பார்ப்போம்.

அஞ்சலிதேவி நடித்த கலைவாணன் மற்றும் ஓரிரு படங்களில் அவரது சம்பந்தி கே.சாரங்கபாணியும் நடித்துள்ளார்.

எம்.கே.ராதா நீலமலைத் திருடன்
கே.ஆர்.ராமசாமி சொர்க்க வாசல்
நரசிம்மபாரதி தோழன்
எஸ்.பாலச்சந்தர் பெண், டாக்டர் சாவித்திரி
டி.கே.பகவதி ரத்த பாசம்
எம்.ஜி.ஆர். மர்மயோகி, உரிமைக் குரல்
சிவாஜி பூங்கோதை, பக்த துக்காராம் (தெலுங்கு), அருணோதயம்
ஜெமினி கணேசன் லவ குசா, பங்காளிகள்
எஸ்.எஸ்.ஆர். பூமாலை
என்.டி.ராமாராவ் கிராமப் பெண்
ஏ.நாகேஸ்வரராவ் மாதர்குல மாணிக்கம்
காந்தாராவ் ஜெயசிம்ஹன்
காளி என்.ரத்னம் ஆதித்தன் கனவு, மாயாவதி
ஃபிரண்ட் ராமசாமி கணவனே கண்கண்ட தெய்வம்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மங்கையர்க்கரசி, முதல் தேதி, டாக்டர் சாவித்திரி, தோழன், சக்கரவர்த்தி திருமகள்

கே.ஏ.தங்கவேலு பூலோக ரம்பை, வீரக் கனல், நான் சொல்லும் ரகசியம், அடுத்த வீட்டுப் பெண்
சந்திரபாபு நான் சொல்லும் ரகசியம்
எஸ்.ஏ.நடராஜன் கன்னியின் காதலி, மர்மயோகி
கே.ஆர்.ராம்சிங் தோழன், கன்னியின் காதலி
கே.பாலாஜி எங்கள் செல்வி
ஜெய்சங்கர் மகனே நீ வாழ்க, வாக்குறுதி
ரவிச்சந்திரன் நாலும் தெரிந்தவன், சபதம்
ஏ.வி.எம்.ராஜன் என்னதான் முடிவு, அனாதை ஆனந்தன்
ரஜினிகாந்த் அன்னை ஓர் ஆலயம்
கமலகாசன் காதல் பரிசு

(தொடரும்)


கவிஞர் பொன். செல்லமுத்து





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ




Reply

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
ரொறன்ரோ கல்விச் சபையில் தமிழ் மரபுத் திங Saski General 3 14-05-2018 03:22 PM
தொகுப்பாளினி ஆர்த்தி பேட்டி .... தமிழ்ல பேச Saski Cine News 1 21-11-2014 02:03 PM
ஏன் என்னை அறிந்தால் தலைப்பு! விளக்கம் சொ Saski Cine News 3 03-11-2014 03:41 PM
சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் விஜ& Saski Cine News 5 31-10-2014 02:38 PM
சாமிகிட்ட சொல்லி புட்டேன் உன்ன நெஞ்சில் Saski Lyrics 1 23-10-2014 10:47 AM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2018, vBulletin Solutions, Inc.
vBulletin Skin developed by: vBStyles.com
Ad Management plugin by RedTyger